அர்த்தாநாரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி பூஜை ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2014 11:02
தியாகதுருகம்: ரிஷிவந்தியத்தில் உள்ள அர்த்தாநாரீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா நடக்கிறது. இங்குள்ள மூலவர் சுயம்பு லிங்கத்தின் மீது தேனபிஷேகம் செய்யும் போது சிவ சக்தியை ஒளிவடிவத்தில் தரிசிக்கலாம் என்பது சிறப்பம்சமாகும். நாளை (27ம்தேதி) மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு முதல்கால பூஜை, அதைத்தொடர்ந்து 10 மணி, அதிகாலை 2 மணி, 4 மணி ஆகிய வேளைகளில் மொத்தம் 4 கால சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.