கிருபாபுரீஸ்வரர் கோவிலில் நாளை மகாசிவராத்திரி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2014 11:02
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நாளை(27ம்தேதி) நான்கு கால பூஜைகள் நடக்கிறது. திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் நாளை (27ம்தேதி) மகாசிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாளை இரவு 8:00 மணிக்கு முதல்கால பூஜையும், நள்ளிரவு 12:00 மணிக்கு இரண்டாம் காலம், அதிகாலை 2:00 மணிக்கு மூன்றாம் காலம், அதிகாலை 4:00 மணிக்கு நான்காம்கால பூஜைகள் நடக்கிறது. நான்கு கால பூஜைகளின் போது அருளாளர் சுந்தரர் அருட்சபை சார்பில் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் வெங்கடகிருஷ்ணன், குருக்கள் ரவி மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.