பதிவு செய்த நாள்
27
பிப்
2014
11:02
மேல்நல்லாத்துார்: மேல்நல்லாத்துார் அங்காள பரமேஸ்வரி கோவிலில், 12ம் ஆண்டு மயானக் கொள்ளை விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. திருவள்ளூர் அடுத்த, மேல்நல்லாத்துாரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில், 12ம் ஆண்டு மயானக் கொள்ளை விழாவை முன்னிட்டு, கடந்த 25ம் தேதி காலை 7:00 மணிக்கு மேல், 8:30 மணிக்குள் சிறப்பு அபிஷேகமும், பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. அதன் பின் நேற்று, 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரமும், விசேஷ அபிஷேகமும் நடைபெற உள்ளது. நாளை காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு பதி அலங்காரமும் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (1ம் தேதி) காலை 6:00 மணிக்கு, மகா அபிஷேகத்திற்கு தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், அதன் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், காலை 9:00 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெறும். அதன்பின், மதியம் 12:00 மணிக்கு அன்னதானமும், பகல் 1:00 மணி முதல், மயானக் கொள்ளை உற்சவம் நடைபெறம். இரவு 7:00 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் அருள் வாக்கு கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.