ஆதிகேசவ பெருமாள் கோவில் உண்டியல் வருவாய் ரூ.8.14 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2014 11:02
ஸ்ரீபெரும்புதுார் : ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உண்டியல் திறக்கப்பட்டதில், 8.14 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் உண்டியல், கோவில் நிர்வாக அலுவலர் தியாகராஜன், இந்து சமய அறநிலையத் துறை வட்ட ஆய்வாளர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் திங்கள்கிழமை திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்களால் எண்ணப்பட்டது. இதில், 83 கிராம் தங்க நகைகள், 75 கிராம் வெள்ளிப் பொருட்கள், 8.14 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது.