மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷ விழா: தஞ்சை பெரிய கோவிலில் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2014 10:02
தஞ்சாவூர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவிலில் மூலவர் பெருவுடையாருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. இதில், திரவியபொடி, மஞ்சள்பொடி, பால், தயிர்,சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவிலில் மகாநந்தியம் பெருமானுக்கும் குடம், குடமாக மஞ்சள் அபிஷேகம் நடந்தது. பெருவுடையார் மற்றும் மகா நந்திக்கு நடந்த பல்வேறு அபிஷேகங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து சென்று திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.