பதிவு செய்த நாள்
28
பிப்
2014
11:02
வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமாரசுவ ாமி கோவில், 131வது ஆ ண்டு மாசி மஹாசிவராத்திரி தேர்த்திருவிழா, நேற் று துவங்கி, மார்ச், 15ம் தேதி வரை நடக்கிறது. வெள்ளகோவில், வீரக்குமாரசுவாமி கோவில், பதினென் சித்தர்களால் உருவாக்கப்பட்டது. இங்கு, கருக்கட்டான் மரம் தலவிருட்சமாகும். இக்கோவிலின் உள்ளே பெண்கள் சென்று வழிபடும் பழக்கம் இல்லை. இங்கு பதினென் சித்தர் சபை அமைந்துள்ளது. இக்கோவிலில் வெடி வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தீராத பிணி, வழக்கு, வேண்டுதல்களை சீட்டாக எழுதி, கையெழுத்திட்டு, கோவிலில் கட்டி வேண்டினால், பலன் கிட்டும். திருப்பூர், கோவை, ஈரோடு, திருச்சி உட்பட பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். பாதகுறடு, கவசம் அணிந்து, இடுப்பில் தாங்கு கச்சை, உடைவாள், குத்துவாள் ஏந்தி, தோளில் சாட்டை, வலது கரத்தில் வேலாயுதம், இடது கரத்தில் தண்டும் தரித்து, தலையில் சடாமுடி கொண்டு, நிஷ்டா மூர்த்தியாக வீரக்குமாரர் அருள்பாலிக்கிறார். அவருக்கு, மாசி மஹாசிவராத்திரி தேர்த்திருவிழா, நேற்று மாலை, 7.30 மணிக்கு பள்ளய பூஜையுடன் துவங்கியது. இன்று, மாலை, 4.30 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளுதல், இரவு, ஏழு மணிக்கு திருத்தேர் நிலை பெயர்தல் நடக்கிறது. திருத்தேரை வனத்துø ற அமைச்சர் ஆனந்தன், தி ருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, எம்.எ ல்.ஏ., நடராஜ், இணை ஆணையர் நடராஜன், நகராட்சி தலைவர் கந்தசாமி, உதவி ஆணையர் ஆனந்த் ஆகியோர், வடம் பிடித்து, தேரை நிலை பெயர செய்கின்றனர். மார்ச் ஒன்றாம் தேதி மாலை, 4.30 மணிக்கு, தேரோட்டம் நடக்கிறது. இரண்டாம் தேதி மாலை, 3 மணிக்கு திருத்தேர் நிலை சேர்த்தல் நிகழ்ச்சியும், தேவஸ்தான மண்டப கட்டளை நடக்கிறது. தினமும், இரவில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. மார்ச், மூன்று முதல், 14ம் தேதி வரை, கோவில் குலத்தவர்கள் மண்டபக்கட்டளை நடக்கிறது. 15ம் தேதி, மஞ்சள் நீர் பூஜையுடன் விழா நிறைவடைகிறது. தக்கார் நடராஜன், செயல் அலுவலர் நாகராஜ், கோவில் குலத்தவர்கள், கணக்கர் பழனிசாமி ஆகியோர் ஏற்பாடுகளை செய்கின்றனர்.