Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் அனைத்து ... திருமலை திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு! திருமலை திருப்பதி லட்டுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்கள் மீது பூசாரி நடந்து செல்லும் சடங்கு: தடையை மீறியதால் பரபரப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 மார்
2014
10:03

பெ.நா.பாளையம்: சிவராத்திரி விழாவில் போலீஸ் தடையை மீறி, பெண் பக்தர்கள் மீது ஆணிகள் பதிக்கப்பட்ட செருப்புடன் பூசாரி நடந்து சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது. கோவை அருகே பூச்சியூரில், மகாலட்சுமி, வீரபத்திரர்- தொட்டம்மாள், வேட்டைக்காரசாமி கோவிலில், ஆண்டுதோறும், சிவராத்திரி சிறப்பு பூஜை, வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இதில், வேட்டைக்கார சுவாமி ஊர்வலத்தில், ஆணிகள் பதிக்கப்பட்ட செருப்புடன், பூசாரி நடந்து வருவார். அப்போது, தங்கள் வேண்டுதல் நிறைவேற பெண் பக்தர்கள், தரையில் குப்புறப் படுத்துக் கொள்வர். இவர்கள் மீது பூசாரி நடந்து செல்வார். இச்செயலுக்கு மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல்வேறு பெண்கள் நலச் சங்கங்கத்தினர், எதிர்ப்பு தெரிவித்ததால், 10 ஆண்டுகளுக்கு முன், பெண் பக்தர்கள் மீது பூசாரி நடந்து செல்லும் சடங்கிற்கு, தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சிவராத்திரி விழாவையொட்டி நேற்று காலை, வேட்டைக்கார சாமி ஊர்வலம் நடந்தது. ஆணிகள் பதிக்கப்பட்ட செருப்புடன், பூசாரி சுப்பையா நடந்து வந்தார். அப்போது, பெண் பக்தர்கள் சிலர், திடீரென தரையில் படுத்தனர். அவர்கள் மீது பூசாரி நடந்து சென்றார். கடந்த, 10 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த சடங்கு, நேற்று மீண்டும் நடந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் கண்காணித்திருந்தால், இச்செயலை தடுத்திருக்கலாம் என, பக்தர்கள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar