தேவகோட்டை: தேவகோட்டையில் சிவராத்திரியை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மும்முடிநாதர், கைலாசநாதர் கோயில், சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், ஆதிசங்கரர் கோயில்களில் நேற்று முன்தினம் நான்குகால சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. தாழையூர் கூத்தாடி முத்துபெரியநாயகி அம்மன் கோயில் சிவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று பகலில் பால்குடம்,காவடி எடுத்து தீ மிதித்தனர். கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் கோயிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.