பதிவு செய்த நாள்
01
மார்
2014
11:03
நத்தம்: நத்தம் பகுதிகளில் சிவராத்திரியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.நத்தம் கைலாசநாதர்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நந்திபகவானுக்கும், கைலாசநாதர் செண்பகவல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தன. இதில், சுவாமிக்கு சுண்டல், பாசிபயறு, தட்டைப்பயறு, மொச்சை மற்றும் பழங்கள், இனிப்பு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று இரவு முழுவதும் கண்விழித்து வழிபட்டனர். நத்தம் மாரியம்மன் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு பதினெட்டு வகை அபிஷேகங்கள், பொங்கல் வைத்துசிறப்பு வழிபாடு நடந்தது. நத்தம் அசோக்நகரில் அமைந்துள்ள பகவதியம்மன் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன. இதில் அம்மனுக்கு கனிவகைகள், நவதானியங்கள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தி.வடுகப்பட்டி பெத்தண்ணசுவாமி கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஐந்து நாட்கள் கொண்ட உற்சவ விழா நடந்தது.பக்தர்கள் குழுவாக சேதுபுரம் சென்று குலதெய்வத்திற்கு சிறப்பு அபிஷேகம், மலர்களால் அலங்காரம், ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.