பதிவு செய்த நாள்
01
மார்
2014
11:03
ராசிபுரம்: உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், மாரியம்மன் கோவிலில் நடந்த மாசி அமாவாசை சிறப்பு அபிஷேக பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் மாசி அமாவாசை அன்று, சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு, ஆறாம் ஆண்டு சிறப்பு அபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது.மா, மாதுளை, கொய்யா, பலா, வாழை, ஆப்பிள், திராட்சை, தக்காளி, கேரட், பீட்ரூட், மிளகாய், வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு, முருங்கை, முள்ளங்கி, பூசணி உள்பட, 1,000 கிலோ காய், கனி வகைகளால், ஸ்வாமி அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும், பக்தர்களுக்கு திருமண பாக்கியம், புத்திர பாக்கியம், செவ்வாய் தோஷம், திருமண தோஷம், நாகதோஷம் போன்றவை நீங்கவும், இந்த சிறப்பு உற்சவம் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.