கீழக்கரை: கீழக்கரை மகான் செய்யது அப்பா தர்காவில் 839ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றம் நடந்தது. தர்கா டிரஸ்டி சதக்கத்துல்லா கந்தூரி கொடியேற்றினார். உலக மக்களின் நல்லிணக்கத்திற்காக பீர் முகம்மது ஆலிம் முன்னிலையில் மாவட்ட காஜி சலாஹூத்தீன் துஆ (பிரார்த்தனை) செய்தார். தொடர்ந்து தர்கா மண்டபத்தில் யாசீன் ஓதி, உலக மக்களின் அமைதிக்காக பிரார்த்தனை நடக்கிறது. மார்ச் 15ல், சந்தனம் பூசுதல், ஏப்ரல் 1ல், கொடியிறக்கம் நடைபெற்று நேர்ச்சி வழங்கப்படும். ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் மக்பூல் சுல்த்தான், தாசீம், அடுமை செய்து வருகின்றனர்.