காஞ்சிபுரம்: திருப்புட்குழி விஜயராகவப்பெருமாள் கோவில் தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்துள்ளது திருப்புட்குழி கிராமம். இங்குள்ள மரகதவல்லி சமேத விஜயராகவப் பெருமாள் கோவில் மிக பழமையானது. காஞ்சி தொண்டை மண்ட லத்தில் உள்ள வைணவ கோவில்களில், 108 திவ்விய தேசத்தில் இந்த கோவிலும் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த கோவில் பிரமோற்சவத்தின் 8வது நாள் திருவிழாவான நேற்று, திருத்தேர் உற்சவம் கோலாகலமாக நடந்தது.பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளியிருந்த திருத்தேரை, காலை 8:30 மணிக்கு, பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். ராஜாஜி தெரு, வள்ளார் தெரு, பாரதி தெரு, திருவள்ளுவர் தெருக்களில் சுற்றி வந்து, நண்பகல் 12:00 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது.