காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், வரும், 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. காஞ்சிபுரம் நகரில், ஏலவார் குழலி உடனுறை ஏகாம்பரநாதர் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பூதத்தலங்களில் (மண்) ஒன்றாகக் கருதப்படும் இந்த கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடக்கும். அதன்படி இந்த ஆண்டிற்கான உற்சவம், வரும், 7ம் தேதி காலை, 4:00 மணி முதல் 5:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கேசவராஜி மற்றும் அறநிலையத் துறை உதவி ஆணையர் மோகனசுந்தரம் ஆகியோர் செய்துள்ளனர்.
உற்சவ விவரங்கள்:
தேதி நேரம் உற்சவ நிகழ்ச்சி
7ம் தேதி காலை 6:30 பவழக்கால் சப்பரம் இரவு 7:00 சிம்ம வாகனம். 8ம் தேதி காலை 6:30 சூர்ய பிரபை இரவு 7:00 சந்திர பிரபை. 9ம் தேதி காலை 6:30 பூதவாகனம் இரவு 7:00 சப்பர வீதியுலா. 10ம் தேதி காலை 6:30 நாக வாகனம் இரவு 7:00 வெள்ளி இடபவாகனம். 11ம் தேதி காலை 6:30 வெள்ளி அதிகார நந்திசேவை இரவு 7:00 கைலாசபீட ராவண வாகனம். 12ம் தேதி காலை 6:30 அறுபத்து மூவர் உற்சவம் இரவு 7:00 வெள்ளிதேர். 13ம் தேதி காலை 6:30 இரதோற்சவம். 14ம் தேதி காலை 6:30 எடுப்நுபு ரதகாட்சி இரவு 7:00 குதிரை வாகனம். 15ம் தேதி காலை 6:30 ஆள்மேல் பல்லக்கு இரவு 7:00 வெள்ளிமாவடிசேவை. 16ம் தேதி காலை 6:30 சபாநாதர் தரிசனம் இரவு 7:00 பங்குனி உத்திரதிருக்கல்யாணம்.