பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகேயுள்ள அரும்பாவூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. காலையில் தொடங்கிய மயான கொள்ளை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு உதிரம் கலந்த சாதம் வழங்கப்பட்டது.5ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.