கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடரில் உள்ளது தேவாலா வேட்டைக்கொருமகன் மற்றும் ஆயிரம்வல்லி சக்தி முன்னீஸ்வரன் கோயில், இக்கோயில் தேர்திருவிழா கடந்த மாதம் 27-ம் தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று இரவு 7 மணிக்கு திருத்தேர் ஊர்வலம் வான வேடிக்கையுடன் துவங்கியது.அப்போது பெண்கள், விளக்கு ஏந்தி வந்தனர். கலைஞர்கள் தெய்வங்களின் வேடமணிந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.