திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் மாசித்திருவிழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2014 10:03
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயில் மாசிப்பெருவிழா கொடியேற்றம், நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோயில் விழா, பிப்.,27ல் துவங்கியது. நேற்று காலை 9 மணிக்கு, திருமாங்கல்யம், மஞ்சள் புடவை அம்மனுக்கு சாத்துப்படி செய்தல் நடந்தது. காலை 10.30 மணிக்கு பாலக்கொம்பு ஊன்றுதல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இரவு அம்மன் கரகத்துடன் எழுந்தருளி, மேற்குரத வீதி, கலைக்கோட்டு விநாயகர்கோயில், பென்சனர் தெரு, கோபால சமுத்திரம் தெரு, கிழக்குரத வீதி, தெற்குரத வீதி வழியாக சன்னதியை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.