கோவை:கோவையில் காவல் தெய்வமாக விளங்கும், கோனியம்மனுக்கு பூச்சாட்டுடன் விழா துவங்கி, கொடியேற்றம், அக்னிச்சாட்டு, திருவிளக்குவழிபாடு ஆகியவை பக்தர்கள் புடைசூழ வெகுவிமரிசையாக நடந்தது. அன்றாடம் மாலை கோவிலில் இசைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம், சுழலும் சொல்லரங்கம், சொற்பொழிவு என்று கோவில் நிர்வாகம் சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் இரவு நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கோவை நகர வீதிகளில் தேர் வலம் வந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
பக்தர்களுக்கு காட்சியளித்தார்.