விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2014 12:03
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் கிழக்கு கோபுர வாசல் முன் மண்டபத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகள் அகற்றப்பட்டன. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து தினசரி ஏராளமானோர் வந்து வழிபட்டு செல்கின்றனர். பிரதோஷ நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமிருக்கும்.கோவில் உள்ள ஐந்து கோபுரங்களில், கிழக்கு கோபுரத்தின் வழியாகத் தான் பெரும்பாலானோர் கோவிலுக்குச் செல்வர். இந்நிலையில் கிழக்கு கோபுர வாசல் முன் மண்டபத்தை சிலர் ஆக்கிரமித்து கடை வைத்திருந்ததால் கோவிலுக்குச் செல்வோர் கடும் அவதியடைந்தனர். இதனைச் சுட்டிக்காட்டி "தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து கோவில் செயல் அலுவலர் பாலசுப்ரமணியராஜன், கோவில் நிர்வாகிகள் கோவில் முன் மண்டபத்தில் ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை நேற்று அகற்றினர்.