பதிவு செய்த நாள்
07
மார்
2014
12:03
ஆனைமலை: ஆனைமலை அடுத்துள்ள அங்கலக்குறிச்சி கிராமத்தில்,விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன் கோவில்களில் கும்பாபிேஷம் நடந்ததுஇக்கோவில்களில், முதலில் மாகாளியம்மனுக்கும், தொடர்ந்து மாரியம்மனுக்கும் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடைபெற்றது. முதலில் கணபதி ேஹாமமும், அதை தொடர்ந்து யாக பூஜைகளும் நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு மகாபிேஷகம், தசதானம், அலங்கார பூஜை, தசதரிசனம், திருக்கல்யாணம் நடத்தி தீபாராதணன காட்டப்பட்டது. பக்தர்களின் மீது தீர்த்தப்பிரசாதம் தெளிக்கபட்டது. மேலும் கும்பாபிேஷகம் முடிந்ததும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.