பதிவு செய்த நாள்
07
மார்
2014
12:03
ஊட்டி : மசினகுடி அருகேயுள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் ரிஷப லக்னத்தில் தேரோட்டம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு திருவிழா வரும் 7ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை நடக்கிறது. 7ம் தேதி நடைதிறக்கப்படுகிறது. 8ம் தேதி திருவிளக்கேற்றுதல், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. 9ம் தேதி இரவு 8:00 மணிக்கு கங்கா பூஜை நடக்கிறது. திருவிழா நாளான 10ம் தேதி காலை முதல் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை, அர்ச்சனை, வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இரவு 10:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. 11ம் தேதி மாவிளக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினர், சோலூர் கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மேற்கொண்டுள்ளனர். விழாவையொட்டி ஆன்மிக அமைப்புகள் சார்பில் 3 நாட்களும் அன்னதானம் வழங்கப்படுகிறது. திருவிழாவுக்காக, நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளதால், திருவிழா நாட்களில் ஊட்டி, கூடலூர், குன்னூர், கோத்தகிரி மற்றும் சமவெளிப் பகுதிகளிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.