பதிவு செய்த நாள்
10
மார்
2014
02:03
திருச்சி: திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவிலில் மண்டல பிரமோற்சவ விழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, ஸ்வாமி, அம்பாள், விநாயகர், சோமாஸ்கந்தர், பிரியா விடை ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. விநாயகர், சுப்பிரமணிய ஸ்வாமி வீதியுலா நேற்று இரவு நடந்தது. தினமும் பல்வேறு உற்சவங்கள் நடக்கிறது.தொடர்ந்து, 48 நாள் நடக்கும் இந்த மண்டல பிரமோற்சவத்தில், 21ம் தேதி பங்குனி தேருக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடக்கிறது. 26ம் தேதி எட்டுத்திக்கும் கொடியேற்றத்துடன் பங்குனித்தேர் திருவிழா துவங்குகிறது.அன்றிரவு சோஸ்கந்தர் புறப்பாடு, 2ம் நாள் ஸ்வாமி-அம்மாள், சூரியபிரபை-சந்திரபிரபையில் வீதியுலா, 3ம் நாள் பூத வாகனம், காமதேனு வாகனம், 4ம் நாள் கிளிவாகனம், 5ம் நாள் ரிஷப வாகனங்கள் தெருவடைஞ்சான் நிகழ்ச்சி நடக்கிறது.விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக, 6ம் திருநாளான மார்ச், 31ல் தேரோட்டம் நடக்கிறது. ஸ்வாமி-அம்பாள் தனித்தனி தேரில் எழுந்தருளி, 4ம் பிரகாரம் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா, 4ம் தேதியுடன் நிறைவடைகிறது. தொடர்ந்து ஏப்ரல், 13ம் தேதி பஞ்சப்பிரகார விழா நடக்கிறது.அம்பாள் அலங்காரத்தில் ஸ்வாமியும், ஸ்வாமி அலங்காரத்தில் அம்பாளும் எழுந்தருளி, 5ம் பிரகாரத்தில் வீதியுலா நடக்கும். ஏப்ரல், 25ம் தேதியுடன் மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் கண்ணையன், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.