மகாமாரியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்சி துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2014 11:03
திருவாரூர்: வலங்கைமான் வரதராஜன்பேட்டையில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் பங்குனி மாதத்திருவிழாவைத் தொடர்ந்து குடமுருட்டி ஆற்றில் இரு ந்து சக்தி கரகம் எடுத்துவரப்பட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் மகாமாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சக்தி ஸ்தலம் என போற்ற ப்படும் இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பாடை கட்டி விழா மிகவும் கோலாகலமாக கொண்டாப்படுகிறது. இதில் பக்தர்கள் பங்கேற்று பாடை கட்டி, பல்வேறு செடிகள் அமைத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருவதால் பல்வேறுப்பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 7ம்தேதி பூச்செறிதல் விழாவும், கடந்த 11ம்தேதி குடமுருட்டி ஆற்றில் இருந்து சக்திகரகம்காவடி புறப்பாடும் முதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இம்மாதம் 16ம்தேதி இரண்டாம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 23ம்தேதி நடக்கும் பாடை திருவிழாவில் அலகு காவடி, பாடைக்காவடி,அங்கபிரதட்ணம் உள்ளிட்ட வகையில் அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 30ம் தேதி புஷ்பபல்லக்கு, ஏப்ரல் 13ம்தேதி கடை ஞாயிறு விழாவும் நடக்கிறது.