திருவாரூர்: நீடாமங்கலம் அருகே உள்ள எருமைப்படுகையில் உள்ள ராமாமிருதம் கோவிலில் 69ம் ஆண்டு திருவிழா நேற்றுகோலாகலமாக நடந்தது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள எருமைப்படுகையில் ராமாமிருதம் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாத த்தில் கோவில் திருவிழா வெகு விமர்சியாக கொண்டா டப்படுகிறது. நேற்று 69ம் ஆண்டு திருவிழா நேற்றுகோலாகலமாக நடந்தது. இதில் சுற்றுப்பகுதி பக்தர்கள் பங்கேற்று சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.