பதிவு செய்த நாள்
11
மார்
2014
11:03
குன்னூர்: குன்னூர் ஓட்டுப்பட்டறையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது.குன்னூர் அருகே ஓட்டுப்பட்டறையில் உள்ள மகாசக்தி செல்லாண்டியம்மன் கோவிலில் கடந்த 3ம் தேதி 39வது ஆண்டு திருவிழா துவங்கியது. கணபதி ஹோமம், குன்னூரில் மழை வேண்டி அம்மனுக்கு 108 சிறப்பு சங்காபிஷேகம், அம்மன் அழைப்பு, கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை, ராகுகாலபூஜை, பால்குடம் எடுத்தல், திருப்பூச்சாற்று, முளைப்பாரி எடுத்தல், அன்னபூரணி பூஜை, அம்மன் கரக ஊர்வலம், அக்கினி கும்பம் எடுத்தல், அபிஷேக ஆராதனை ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம் இரவு அம்மன் திருவீதி உலா நடந்தது. கோவிலில் துவங்கிய ஊர்வலம் ஸ்டேன்லி பார்க் சென்று ஓட்டுப்பட்டறை, மவுன்ட் பிளசன்ட் வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. நேற்று மாவிளக்கு பூஜை, கஞ்சிவார்த்தல் ஆகியவை நடந்தன. இன்று மஞ்சள் நீராடலுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் உபயதாரர்கள் மேற்கொண்டனர்.