பதிவு செய்த நாள்
12
மார்
2014
10:03
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று பாலாலய பூஜை நடக்கிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், சுவாமி, அம்மன், விநாயகர் சன்னதி உள்ளிட்ட 21 விமானங்கள், கிழக்கு, மேற்கு ராஜகோபுரங்களுக்கு திருப்பணி துவக்கிட, இன்று கோயிலில் பாலாலயம் பூஜை நடக்கிறது. நேற்று காலை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை, மாலையில், முதல் கால யாக பூஜை நடந்தது. இன்று (மார்ச் 12) காலை, இரண்டாம் கால யாக பூஜைக்கு பின், பாலாலயம் நடக்கும் என, கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதியில், கும்பாபிஷேகம் நடக்கிறது.