பதிவு செய்த நாள்
12
மார்
2014
01:03
மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
சுக்கிரன் மட்டும் மார்ச் 31 வரை நன்மை வழங்க இருக்கிறார். பண வரவு இருக்கும். சொந்தபந்தம் வருகை இருக்கும். உடல் நலம் திருப்தி அளிக்கும். அதன்பின் காரியத்தடை, பொருள் நஷ்டம்ஏற்படலாம். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால், எந்த ஒரு காரியத்தையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கிடைக்காமல் போகாது.குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். குடும்ப வாழ்வு ஆனந்தமாக இருக்கும். பெண்களின் ஆதரவு கூடுதலாக கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உடல் நலத்தில் சிறிது அக்கறை காட்டவேண்டியது இருக்கும். தொழில், வியாபாரத்தில் செவ்வாயால் அலைச்சல் ஏற்படும். மனவேதனை ஏற்படலாம். எதிரிகளால் பிரச்னை வரத்தான் செய்யும். மார்ச் 15,16 ஏப்ரல் 11,12-ந் தேதிகளில் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். மார்ச் 24,25ல் எதிர்பாராத முன்னேற்ற சம்பவம் நடக்கும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். மார்ச் 28-ந் தேதிக்கு பிறகு பணியாளர்கள் விரும்பிய இடமாற்றம் பெறுவர்.கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மார்ச் 30க்கு பிறகு சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தம் பெற வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகளுக்கு பண வரவு எதிர்பார்த்த படி இருக்காது. விவசாயிகள் நல்ல மகசூல் பெறுவர். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு சிரத்தை எடுத்து படிப்பது உங்களை சிறந்த நிலைக்கு கொண்டு செல்லும். பெண்கள் அக்கம் பக்கத்தினருடன் அனுசரணையுடன் இருப்பர். குடும்பத்தாரிடம் நன் மதிப்பை பெறலாம்.
நல்ல நாள்: மார்ச் 15,16,17,18,24,25,26,27,30,31 ஏப். 3,4,5,11, 12.
கவன நாள்: மார்ச் 19,20 சந்திராஷ்டமம் கவனம்.
அதிர்ஷ்ட எண்: 2,5 நிறம்: வெள்ளை
வழிபாடு: செவ்வாய்க்கிழமை காளி, முருகன், நரசிம்மர் வழிபடுங்கள். சனியன்று பெருமாளுக்கும், வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை செய்யுங்கள்.