பதிவு செய்த நாள்
12
மார்
2014
01:03
கும்பம் (அவிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி 1,2,3)
குரு,கேதுவால் நன்மை உண்டாகும். சுக்கிரன் 31ல் சாதமான இடத்துக்கு மாறுகிறார். மற்றகிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில்இருப்பதால், எந்த ஒரு விஷயத்திலும் கவனம்அவசியம். கேதுவால் அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். புதனால் மார்ச் 28-ந் தேதி வரை குடும்பத்தில்பிரச்சினை வரலாம். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். பெண்கள் உதவிகரமாகஇருப்பர். .கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். சூரியனால் கண்தொடர்பான உபாதை வரலாம். செவ்வாயால் உஷ்ண, பித்தம், மயக்கம் போன்ற உபாதை உண்டாகும். உடல்நலனில்கவனம் தேவை.தொழில், வியாபாரத்தில் சிறப்பான பலன்களை காணலாம். தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அவ்வப்போது எதிரியால் இடையூறு வரலாம். ஏப்ரல் 8,9,10ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.பணியாளர்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். உழைப்புக்கேற்ப வருமானம் கிடைக்கும். அடிக்கடி வெளியூர்பயணம் மேற்கொள்ள நேரிடும். பணியிடத்தில் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். கலைஞர்களுக்கு மார்ச் 30க்கு பிறகு சிறப்பான வளர்ச்சி உண்டாகும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர் பார்க்க முடியாது.மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். கவனம் தேவை.அக்கறையுடன் படித்தால் தடைகளை முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். விவசாயிகளுக்கு பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் இருக்கும். பெண்கள் புனித தலங்களுக்கு சென்று மகிழ்வர். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவர்.
நல்லநாள்:மார்ச்15,16,21,22,23,24,25,28,29, ஏப். 1,2,8,9,10,11,12
கவன நாள்: மார்ச் 17,18,ஏப்.13
அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: மஞ்சள், சிவப்பு
வழிபாடு: ராகுவுக்கு உளுந்து படைத்து மந்தாரை மலரால் அர்ச்சியுங்கள். வராஹி, துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ராகு காலத்தில் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.