புதுச்சேரி: வில்லியனுார் கணுவாப்பேட்டை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை உற்சவம் நேற்று நடந்தது.கோவில் ௩௫ம்ஆண்டு மகோற்சவ விழா கடந்த ௩ம் தேதி துவங்கியது. தொடர்ந்து இருளன் கப்பரை, பூவாள் கப்பரை, மாவாள் கப்பரை, அக்னி கரகம், மோகன கப்பரை, பூங்கரகம், ரணகளிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய உற்சவமான மயானக் கொள்ளை நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மனை வாணவேடிக்கையுடன் பக்தர்கள் சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். அங்கு நடந்த மயானக் கொள்ளை உற்சவத்தில், பழங்கள், காய்கறிகள், சில்லரை காசுகளை வீசி எறிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.