காரமடை: காரமடை அரங்கநாதர்ர கோவிலில் 40 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம், கடந்த ஜனவரி மாதம் உண்டியலில் காணிக்கை எண்ணிக்கையின் போது ரூ. 8 லட்சத்து 82 ஆயிரத்து 765 இருந்தது. கோவிலில் மாசிமகத் தேரோட்ட விழா கடந்த பிப்ரவரியில் நடந்தது. இதில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். கோவிலில் உண்டியலில் விழுந்த காணிக்கைகள் எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடந்தது. கோவை மருதமலை கோவில் துணை ஆணையர் பழனிக்குமார் தலைமையில் ,கோவில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், மேலாளர் ராமராஜன், கோவில் ஊழியர்கள் , கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர் இதில் ரூ. 12 லட்சத்து 12 ஆயிரத்து 121 பணமும், 20 கிராம் தங்கமும், 35 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன.