திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று பங்குனி மாத பூஜைகளுக்காக நடைதிறக்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் இல்லை. நாளை, 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைதிறந்திருக்கம். ஐந்து நாட்களிலும் அதிகாலை நெய் அபிஷேகம் நடக்கும். வரும் 19ம் தேதி மாலை நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.