நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப்பெருவிழாவை முன்னிட்டு அம்மன் அலங்கரிக்கப்பட்ட கேடயம், சிம்மம் வாகனங்களில் நகர்வலத்துடன் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.மாசிப்பெருவிழாவை முன்னிட்டு மார்ச் 3 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து 4 ல் பக்தர்கள் காப்புக் கட்டுதல் நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கேடயம், சிம்மம் வாகனங்களில் அம்மன் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக அரண்மனை சந்தனக்கருப்பு கோயிலிலிருந்து பால்குடம் எடுத்து நகர்வலம் வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை செய்து வழிப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறநிலைய செயல் அலுவலர் செல்வி மற்றும் பரம்பரை பூஜாரிகள் சொக்கையா, சுப்புராசு, சின்னராசு, நடராசு ஆகியோர் செய்தனர்.