ஆனைமலை: ஆனைமலையை அடுத் துள்ள கோட்டூர் பழனியூரில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவிலின் கடந்த 7--ம் தேதி வாஸ்து சாந்தி, யாக சாலை பூஜை மற்றும் கொடி யேற்றுத்துடன் குண்டம் விழா துவங்கியது.இதையொட்டி தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. கடந்த 11-ந் தேதி காலை 7 மணிக்கு அம்மன் பச்சை அலங்காரத் துடன் குதிரை வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணிக்கு தேர்கலசம் ஏற்றுதல், கீதாரதத்தில் அம்மன் பவனி, கும்பஸ்தாபனம், தேவாங்க செட்டியார் பரிவட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 12-ம் தேதி காலை 6 மணிக்கு அம்மன் அபிஷேகம், மாவிளக்கு எடுத்தல், மாலை 6 மணிக்கு பூவோடு எடுத்தல் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு அம்மன் அருள் என்னும் தலைப்பில் பக்தி சொற்பொழிவு, மதியம் 12 மணிக்கு அம்மன் திருக்கல் யாணம், மாலை 6 மணிக்கு அம்மன் ரதம் ஏறுதல் மற்றும் தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து இரவு 10 மணிக்கு குண்டம் திறப்பு மற்றும் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்ற