கீழக்கரை : கீழக்கரை மகான் குத்பு செய்யது முகம்மது அப்பா ஒலியுல்லா தர்காவில், நடந்த சந்தனம் பூசும் விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.கீழக்கரை மகான் குத்பு செய்யது முகம்மது அப்பா ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா, மார்ச் 1ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. கடந்த 14 நாட்கள் மவுலீது ஓதப்பட்டு பொதுமக்களுக்கு நேர்ச்சிகள் வழங்கினர். சந்தனம் பூசும் விழாவை முன்னிட்டு, தர்கா டிரஸ்டி சதக்கத்துல்லா தலைமையில் காட்டுப்பள்ளியில் இருந்து ஊர்வலமாக வெள்ளி குடத்தில் சந்தனம் சுமந்து வந்து, தர்காவில் உள்ள அடக்க ஸ்தலத்தில் பூசப்பட்டது.உலக மக்களின் அமைதிக்காகவும், நல்லிணக்கம் வேண்டியும் அனஸ் ஆலிம் சிறப்பு பிரார்த்தனை செய்தார். ஏப்., 1ல் கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை மக்பூல் சுல்த்தான், ஜலால், சேகு அபுபக்கர் சித்திக், பீர் முகம்மது ஆலிம் உட்பட விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.