திருப்பூர் சந்தன மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2014 11:03
திருப்பூர்: திருப்பூர் தெற்கு மாநகர விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கே.செட்டிபாளையம் பூங்கா நகர், சந்தன மாரியம்மன் கோவிலில், 108 திருவிளக்கு வழிபாடு நடந்தது.விஷ்வ ஹிந்து பரிஷத் தெற்கு மாநகர மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி தலைமை வகித்தார். நிர்வாகிகள் லட்சுமணன், மணிகண்டன், பாண்டி துரை, சிவக்குமார், கவுசிக் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அலகுமலை சேவாஸ்ரமத்தை சேர்ந்த குகப்பிரியானந்த சரஸ்வதி சுவாமிகள், திருவிளக்கு பூஜையை நடத்தி, அருளாசி வழங்கினார். விஷ்வ ஹிந்து பரிஷத் கோட்ட செயலாளர் நாச்சிமுத்து பேசினார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.