லட்ச தீப திருவிழா: விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் குளம் சீரமைப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2014 10:03
விழுப்புரம்: லட்ச தீப திருவிழாவையொட்டி விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் குளம் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.விழுப்புரத்தில் ஆண்டு தோறும் லட்ச தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் இத்திருவிழா சித்திரை 1ம் தேதி (ஏப்., 14ம் தேதி) துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொது மக்கள், பெண்கள் பலர் பங்கேற்று அகல் தீபம் ஏற்றி வழிபடுவர். விழாவில் கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடத்தப்படும்.இதையொட்டி கோவில் குளத்தை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. கோவில் குளத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி தீ வைத்து கொளுத்துப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.