பதிவு செய்த நாள்
19
மார்
2014
11:03
சேலம்: சேலம், எல்லைப்பிடாரியம்மன் கோவில் விழா, நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது.சேலம், வின்சென்ட்டில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவில், பங்குனி உற்சவ விழா, நேற்று இரவு, 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்களை கொண்டு வந்து, எல்லைப்பிடாரியம்மனுக்கு தூவினர். முன்னதாக, கோவில் அருகே மஞ்சள் கம்பம் நடப்பட்டது. விழாவில், ஊர்க்கவுண்டர் சண்முகம், சுரேஷ், அஸ்தம்பட்டி மண்டல தலைவர் மாதேஸ்வரன், முன்னாள் தர்மகர்த்தா மனோகரன், அய்யனார், ரமேஷ், அருண், அப்பு மற்றும் கட்டளை தாரர்கள் பங்கேற்றனர்.மார்ச், 25ம் தேதி, மா விளக்கு பூஜை, 26ம் தேதி, பொங்கல் விழா, 27ம் தேதி, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 28ம் தேதி, பால்குட ஊர்வலம், 29ம் தேதி, சத்தாபரணம், 30ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.