கமுதி: கமுதி முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு இன்று அக்னிசட்டி, பால்குடம், கரும்பாலை தொட்டில் நேர்த்திக்கடன், பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மார்ச் 21ல் பக்தர்கள் பால்குடம் எடுத்து கோயிலுக்கு வருகின்றனர். அன்று மாலை, 2007 திருவிளக்கு பூஜை நடக்கிறது. மார்ச் 22ல் பெண்கள் முளைப்பாரி சுமந்து கோயிலுக்கு வருகின்றனர். ஏற்பாடுகளை, சத்திரிய நாடார்கள் உறவின் முறை அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.