அன்னூர் கோவை, அன்னூர் சுக்ரமணிக்கவுண்டன்புதூரில் குண்டம் திருவிழா நடந்தது. சுக்ரமணிக்கவுண்டன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 18-ம் தேதி கலச பூஜையுடன் துவங்கியது. இரவு விநாயகர் அழைத்து வருதல், குண்டம் வளர்த்தல் நடந்தன. நேற்று அதிகாலை 4 மணிக்கு அக்னி கரகம் எடுத்தல் நடந்தது. காலை 6.05 மணிக்கு குண்டம் இறங்குதல் துவங்கியது. 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டத்தில் இறங்கினர். பின், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், அலங்கார பூஜை நடந்தது. சிறுவர், சிறுமியருக்கு விளையாட்டு போட்டி நடந்தது.