பதிவு செய்த நாள்
24
மார்
2014
10:03
புதுச்சேரி: வில்லியனூர் திருகாமீஸ்வரர் கோவிலில், சுவாமி மீது சூரிய ஒளி பட்ட நிகழ்வை, பக்தர்கள் பார்த்து பரவசமடைந்தனர்.வில்லியனூரில் கோகிலாம்பிகை சமேத திருகாமீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் பங்குனி மாதம் 9, 10, 11 ஆகிய மூன்று நாட்களில் சூரிய பூஜை விமர்சையாக நடந்து வருகிறது. நேற்று காலை, 6:00 மணிக்கு சித்தரை மண்டபம், ராஜகோபுரம், அர்த்த மண்டபம், இரண்டு வாயில்களை கடந்து சுயம்பு திருகாமீஸ்வரர் மீது சூரிய ஒளிப்பட்ட, சூரிய தரிசன நிகழ்வு நடந்தது. இன்று, 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களும் இந்த அற்புத நிகழ்வு நடக்கும் என கூறப்படுகிறது. நேற்று காலை நடந்த நிகழ்வை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசித்தனர்.