கம்பம் : கம்பராயப்பெருமாள் கோயில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் கடந்த பிப்., 12 ல் நடைபெற்றது. இந்த திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகத்தை கம்பம் ராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் பாஸ்கர், தனது சொந்த செலவில் செய்து கொடுத்தார். ரூ. 60 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்து 45 நாட்களானதை தொடர்ந்து, மண்டல பூஜைகள் துவங்கியது. காலை 8 மணி முதல் துவங்கிய இந்த பூஜைகளை ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஸ்தானிகம் ரமேஷ் என்ற ரெங்காச்சாரி பட்டாச்சாரியர் தலைமையில் 10 பேர்கள் நடத்தினர். தொடர்ந்து பூமிநீளா சமேத கம்பராயப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதற்கென ராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட் சார்பில் தங்கத்திலான இரண்டு தாலிகள் செய்து தரப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், ராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் பாஸ்கர், அவரது துணைவி ரமணி, கோயில் செயல்அலுவலர் விஸ்வநாத் மற்றும் தேர்கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர்.