பதிவு செய்த நாள்
31
மார்
2014
12:03
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுப் பாதையில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில், கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜைகள் நடந்தது. நேற்று நிறைவு நாளை முன்னிட்டு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிதம்பரம் சாரங்கபாணி பட்டாச்சாரியார் தலைமையில் சுதர்சன ஹோமம், மகாலஷ்மி ஹோமம், ராம மூல மந்த்ர ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடந்தது. மகா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். விழாவில் வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன், வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ், கூட்டுறவு வங்கி தலைவர் குசேலன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.