ஆக்கூர்,: நாகை ,செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி கிராமத்தில் இரட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒரே கருவறையில் 2 ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகின்றனர். இக்கோவிலில் அமாவாசை விழாவை முன்னிட்டு சிறப்பு அபிசேகமும், வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு ஆராதனை நடந்தது. தொடர்ந்து ராமர், லெட்சுமணர், சீதையுடன் கூடிய ஆஞ்சநேயர், நாகராஜசாமி ஆகிய தெய்வங்களுக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.