நெல்லிக்குப்பம்: கடலூர் , மாவட்டம், திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நேற்று முன்தினம் செங்கமலத்தாயாருக்கு வசந்த உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-வது நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. செங்கமலத்தாயாருக்கு பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட 18 விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தேவநாதசாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் மாலையில் நாச்சியார்கள் மற்றும் தேவநாதசாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது. பிறகு நாச்சியார்களுடன் தேவநாதசாமி மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.