பதிவு செய்த நாள்
01
ஏப்
2014
11:04
சாத்தூர் : சாத்தூர் மாரியம்மன், காளியம்மன்கோயில்களில், பங்குனி பொங்கல்விழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். சாத்தூர் மெயின்ரோட்டில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோயில் ,பங்குனி பொங்கல் விழா , கடந்த மார்ச் 23 காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், மண்டகப்படியார்கள் சார்பில், மாரியம்மன், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, முக்கியவீதிகள் வழியாக, நகர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு ,பொங்கல்விழா நடந்தது. அம்மனுக்கு பால், பழம், பன்னீர், இளநீர், உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. வைப்பாற்றில் இருந்து கரகம் எடுத்துவரும் நிகழ்ச்சி நடந்தது. நகரின் பல்வேறு பகுதி பக்தர்கள் கோயில் முன்பு, அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு 12 மணிக்கு, காளியம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில், 200 க்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். சாத்தூர் டி.எஸ்.பி., அறிவானந்தம் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சாத்தூர் நகராட்சி சார்பில், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதியும் செய்யப்பட்டிருந்தது.