திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் திரவுபதியம்மன் கோவிலில் காவல்துறை சார்பில் தர்மர் பட்டாபிஷேக விழா நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் திரவுபதியம்மன் கோவிலில் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் அக்னி வசந்த மகோற்சவ விழா துவங்கியது. கடந்த 20ம் தேதி பகாசூரனுக்கு அன்னமிடுதலும், 21ம் தேதி திருக்கல்யாணமும் நடந்தது. 22ம் தேதி நாகக்கன்னி திருமண நிகழ்ச்சியும், 23ம் தேதி அல்லி திருக்கல்யாணமும் நடந்தது. 28ம் தேதி காலை 9:00 மணிக்கு மாடு வளைத்தலும், களப்பலியும், கோட்டை இடித்தலும் நடந்தது. இரவு 8:05 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடந்தது. 30ம் தேதி காவல்துறையினர் சார்பில் தர்மர் பட்டாபிஷேக விழா நடந்தது. பஞ்ச பாண்டவர்கள் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. இரவு சுவாமி வீதியுலாவும், வாண வேடிக்கைகளும் நடந்தன. உத்திரமேரூர் தேவி நாடக மன்றம் மூலம் தர்மர் பட்டாபிஷேகம் குறித்த நாடகம் நடத்தப்பட்டது.