மயிலம்: செண்டூர் பாவந்தியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு மூன்றாவது ஊஞ்சல் உற்சவம் நடந்தது. 30ம் தேதி மாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு மகா தீபாராதனை வழிபாடு நடந்தது . பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.