ஊட்டி: ஊட்டி நகரில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த மாதம் 14-ந்தேதி பூச்செரிதலுடன் தொடங்கியது. கடந்த 16---ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து ஒவ்வொரு சமூகத்தார் சார்பில் நாள்தோறும் தேர் உபயமும் நடைபெற்றது. இதில் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்திலும், அதற்குரிய வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். நேற்று ஹெத்தையம்மனை அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதனை பலர் வணங்கினர்.