பவானி சங்கமேஸ்வரர் கோவில் ஜூன் 9--ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2014 03:04
ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன், வள்ளி, தெய்வானை உடனமர் ஆறுமுகப் பெருமான், ஆதிகேசவப் பெருமாள், சவுந்தரவள்ளித் தாயார் சன்னதிகள் பழுதுநீக்கப்பட்டு வண்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்றன. சுமார் 110 அடி உயரத்துடன் ஐந்து நிலை வடக்கு ராஜகோபுரம், மூன்று நிலை கிழக்கு மற்றும் தெற்கு கோபுரங்கள், கோவில் வளாகத்தில் உள்ள விமானங்கள் ஆகியற்றுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பல லட்சம் செலவிலான பணிகள் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டன. வரும் ஜூன் 9-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.