செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2014 03:04
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற தண்டாயுதபாணி திருக்கோயிலில், பங்குனி உத்திர நிகழாண்டு ஏப். 4 மாலை விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜை நடத்தப்பட்டு, 5-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாள்தோறும் காலை 10 மணிக்கு மலையில் உள்ள மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிறப்பு ரதங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.7-ம் திருவிழாவான ஏப். 11-ம் தேதி முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், 12-ம் தேதி சிவன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரை, வெள்ளி மயில் வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் ஏப். 13-ம் தேதி மாலை நடைபெறுகிறது.