செஞ்சி : செஞ்சி வட்டம் அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அமாவாசையை முன்னிட்டு வீரகும்பம் வழிபாடு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அலகுகளுடன் (வீரவாள்) தேவாங்கர் குல மக்கள் கோயிலில் இருந்து பெரியகுளத்திற்கு ஊர்வலமாகச் சென்றனர். அங்கு மூன்று கலசங்களில் புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது அலகுகள் ஏந்தியோர், பக்திகோஷம் எழுப்பியபடி கோயில் வந்தடைந்தனர். அங்கு கலச நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.